/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி
/
போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : ஆக 23, 2011 11:23 PM
அவிநாசி : அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்து விழிப்புணர்வு
கண்காட்சி நடந்து வருகிறது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள 'ஷெட்டில்'
போக்குவரத்து விழிப்புணர்வு, விபத்துகள், சாலை விதிகள் குறித்த
படக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஐ.ஜி., வன்னியபெருமாள் திறந்து வைத்தார்.
டி.ஐ.ஜி., பாலநாகதேவி, எஸ்.பி., பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.அவிநாசி
டி.எஸ்.பி., பழனிசாமி கூறுகையில், ''அவிநாசி உட்கோட்டம் சார்பில்
அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் படங்கள் இடம் பெற்றுள்ளன.
''இதுதொடர்பாக பேச்சுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி நடக்கும்
விழாவில், பரிசளிப்பு மற்றும் எல்.எல்.ஆர்., வழங்கும் நிகழ்ச்சியில்
எஸ்.பி.,பங்கேற்கிறார்,'' என்றார்.கண்காட்சியை பார்வையிடும் மக்களுக்கு
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் எஸ்.ஐ., ரங்கநாதன், ஏசுதுரை
ஆகியோர் விளக்கம் அளிக்கின்றனர்.