ADDED : ஆக 23, 2011 11:27 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏழு இடங்களில் நேற்று
சிறப்பு துப்புரவு பணி நடந்தது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் ஜம்மனை ஓடை
பகுதி, இரண்டாவது வார்டு அண்ணா காலனி, மங்கலம் ரோடு கருவம் பாளையம்,
அணைமேடு, ஓம்சக்தி கோவில் ரோடு, பூம்புகார் நகர் மேற்கு மற்றும் 50வது
வார்டு பெரிச்சிபாளையம் வினோபா நகர் ஆகிய ஏழு இடங்களில், நேற்று பிற்பகல்
2.30 முதல் 5.00 மணி வரை துப்புரவு பணி நடந்தது.
பெரிச்சிபாளையம் வினோபா
நகரில் நகர் நல அலுவலர் ஜவஹர்லால், சுகாதார அலுவலர் ராஜேந்திரன்
தலைமையிலும், மற்ற பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையிலும்
இம்முகாம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் 100 முதல் 120 துப்புரவு
தொழிலாளர்கள், வீதிகளை தூய்மைப்படுத்துதல், ரோட்டோரங்களில் உள்ள சாக்கடை
கால்வாய்களை தூர்வாரி சுத்தப்படுத்துதல், கழிவுகளை அகற்றுதல், குப்பையை
அப்புறப்படுத்துதல் மற்றும் கொசு மருந்து தெளித்தல், முட்புதர்கள், புற்களை
அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.