ADDED : ஆக 23, 2011 11:27 PM
பல்லடம் : லாரி ஸ்டிரைக் காரணமாக, பல்லடம், சுல்தான்பேட்டை வட்டாரங்களில்
ஐந்து நாளில் ரூ.இரண்டு கோடி மதிப்புள்ள கொப்பரைகள் தேக்கம் அடைந்துள்ளன;
400 தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள்ளனர்.
பல்லடம், சுல்தான்பேட்டை
வட்டாரங்களில் 200 கொப்பரை உற்பத்தி களங்கள் உள்ளன. களங்களில் காயப்போடும்
தேங்காய்கள், ஐந்து நாள் முதல் ஏழு நாளில் கொப்பரைகளாக மாறுகின்றன. இவ்வாறு
உற்பத்தி செய்யப் படும் கொப்பரைகளை, வெளிமார்க்கெட்டில் விற்பனை
செய்கின்றனர்.லாரி ஸ்டிரைக் காரணமாக, கடந்த ஐந்து நாளில் பல்லடம்,
சுல்தான்பேட்டை வட்டாரங்களில் ரூ.2 கோடி மதிப்புள்ள கொப்பரைகள் தேக்கம்
அடைந்துள்ளன. இதன் காரணமாக, 50க்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி
களங்களில் கொப்பரை உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட் டுள்ளன. 400
தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள்ளனர்.எனவே, லாரி உரிமையாளர்கள்,
லாரி சங்கத்தினர் கோரிக்கையை அரசு ஏற்று உடனடியாக ஸ்டிரைக்கை முடிவுக்கு
கொண்டு வர வேண்டும் என கொப்பரை உற்பத்தி விவசாயிகள், தொழிலாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.