/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நான்கு நிமிடத்தில் முடிந்த நல்லூர் நகராட்சி கூட்டம்
/
நான்கு நிமிடத்தில் முடிந்த நல்லூர் நகராட்சி கூட்டம்
நான்கு நிமிடத்தில் முடிந்த நல்லூர் நகராட்சி கூட்டம்
நான்கு நிமிடத்தில் முடிந்த நல்லூர் நகராட்சி கூட்டம்
ADDED : செப் 16, 2011 11:29 PM
திருப்பூர் : நல்லூர் நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.
நான்கே நிமிடத்தில், ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் முடிவுற்றது. கூட்டத்தில், குடிநீர் கசிவுகளை சீர் செய்தல், புதிய குடிநீர் குழாய் அமைத்தல், பிளாஸ்டிக் டேங்குக்கு இரும்பு ஆங்கிள் ஸ்டாண்ட், சிமென்ட் ரோடு, தரைமட்ட தொட்டிக்கு கான்கிரீட் உள்ளிட்ட பணிகளுக்கு பொது நிதியில் இருந்து 32.2 லட்சம் ரூபாய் ஒதுக்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.எம்.பி., நிதியில் இருந்து 13வது வார்டு ஜெய்நகர் பகுதியில் தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைக்க 9.50 லட்சம்; துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளிக்கு இரண்டு சீருடை மற்றும் காலனி வழங்குவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.