/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜவுளி உற்பத்தியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் :விசைத்தறியாளர்கள் முடிவு
/
ஜவுளி உற்பத்தியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் :விசைத்தறியாளர்கள் முடிவு
ஜவுளி உற்பத்தியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் :விசைத்தறியாளர்கள் முடிவு
ஜவுளி உற்பத்தியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் :விசைத்தறியாளர்கள் முடிவு
ADDED : செப் 16, 2011 11:33 PM
பல்லடம் : 'சோமனூர், பல்லடம், திருப்பூர், அவிநாசியில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு முன், வரும் 19ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது,' என, விசைத்தறியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நூறு சதவீத கூலி உயர்வு கோரி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 30ம் தேதி முதல் விசைத்தறிகளை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து கோவை தொழிலாளர் நலத்துறை ஆணையர் மற்றும் திருப்பூர் கலெக்டர் மதிவாணன், கோவை கலெக்டர் கருணாகரன் உள்ளிட்டோர் ஏழு முறை பேச்சு நடத்தினர். அப்போது, 'நூல், பஞ்சு விலை பாதியாக சரிந்துள்ளதால் தொழிலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, 10 சதவீத கூலி உயர்வு மட்டுமே அளிக்க முடியும்,' என, ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால், வேலை நிறுத்தம் நீடித்து வரும் நிலையில், திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டு கமிட்டி கூட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது. தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். சோமனூர் தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். அவிநாசி தலைவர் முத்துச்சாமி வரவேற்றார். கூட்டத்தில், வரும் 19ம் தேதி காலை 10.00 மணிக்கு, சோமனூர், பல்லடம், திருப்பூர், அவிநாசி பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளின் அலுவலகம், அலுவலகம் இல்லோதர் வீடுகளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது,' என தீர்மானிக்கப்பட்டது. மேலும், நியாயமான கூலி உயர்வு பெற்றுக் கொடுக்க, தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வது,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்லடம் செயலாளர் பாலசுப்ரமணியம், மங்கலம் தலைவர் வேலுச்சாமி, வேலம்பாளையம் தலைவர் முருகசாமி, புதுப்பாளையம் தலைவர் நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.