/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவர தொழிலாளர் சங்க கிளை தேர்தல்
/
சவர தொழிலாளர் சங்க கிளை தேர்தல்
ADDED : செப் 29, 2011 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்க கொங்கு நகர் கிளை தேர்தல், மாநகர தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடந்தது.
கிளை செயலாளர் குமார் வரவேற்றார். பொருளாளர் பழனிச்சாமி, துணை தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். மாநகர சங்க செயலாளர் ஜீவமதி தேர்தலை நடத்தினார்.கிளை தலைவராக வடிவேல்; செயலாளராக சிவா; பொருளாளராக பழனிச்சாமி; துணை தலைவராக ரவி, துணை செயலாளராக ஈஸ்வரன்; மாவட்ட பிரதிநிதிகளாக குமார் மற்றும் சரவணக்குமார்; மாநில பிரதிநிதி யாக பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புறநகர் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, மாநகர துணை தலைவர் சுரேஷ்பாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.