/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போலீசார் மீது நடவடிக்கை
/
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போலீசார் மீது நடவடிக்கை
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போலீசார் மீது நடவடிக்கை
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போலீசார் மீது நடவடிக்கை
ADDED : செப் 29, 2011 10:04 PM
பல்லடம் : ''மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொய் வழக்கு போட்ட போலீஸ்
அதிகாரிகள் ஓய்வு பெற்றிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,''
என தி.மு.க., முன்னாள் அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார். பல்லடம் கோர்ட்
வளாகத்தில் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த ஐந்து ஆண்டுகளில்
தி.மு.க., அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளது. நான்
பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் கடந்த 20 ஆண்டுகளாக விசைத்தறி
பிரச்னைகளை தீர்க்க பாடுபட்டுள்ளேன். கூலி உயர்வு தொடர்பான
பிரச்னையின்போது விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தத்தை 10 நாட்களுக்குள்
முடித்துள்ளோம். அதிக நாட்கள்வேலை நிறுத்தம் ஏற்படவில்லை.
விசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் பாதிப்படைய வில்லை. தற்போது,
விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கி 30 நாட்களை கடந்து விட்டது;
இன்னும் முடிவுக்கு வரவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள்
நெல்லிக்கனிகள் போல் சிதறி விட்டன. வரும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,
பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். இந்த ஆட்சியில் நகைத்திருட்டுகள்
அதிகமாகி விட்டன. பொய் வழக்கு போடுவதிலேயே போலீசாருக்கு நேரம் சரியாகி
விடுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொய் வழக்கு போட்ட போலீசார் மற்றும்
அதிகாரிகள் மீது, அவர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும், நடவடிக்கை எடுப்போம்,
என்றார்.
அப்போது, முன்னாள் அமைச்சர் சாமிநாதன்உடனிருந்தார்.