sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்

/

மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்

மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்

மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்


ADDED : செப் 29, 2011 10:05 PM

Google News

ADDED : செப் 29, 2011 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் இறகுப்பந்து போட்டி, திருப்பூர் மாவட்ட பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பில், ராயபுரம் ஆல்பின் கிளப்பில் நடந்தது.இறுதி போட்டி நேற்று நடந்தது.

ஜூனியர் ஆண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் விருதுநகர் அணியின் சுதர்சன், மதுரை அணியின் சூர்யபிரகாஷ் களமிறங்கினர்; முதல் சுற்று ஆட்டத்தில் 21-13 புள்ளிகள்; இரண்டாவது சுற்றில் 21-15 புள்ளிகள் பெற்று விருதுநகர் அணி முன்னிலை வகித்தது.இரட்டையர் பிரிவில் சுதர்சன், அசோக்குமார் ஜோடி - சூர்யபிரகாஷ், யஸ்வந்த் ஜோடியை எதிர்கொண்டு ஆடியது. முதல் சுற்றில் 23-21; இரண்டாம் சுற்றில் 20-22; மூன்றாவது சுற்றில் 21- 16 புள்ளிகள் பெற்று சுதர்சன், அசோக்குமார் ஜோடி வெற்றி பெற்றது; ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தில் 2-0 என்ற செட் கணக்கில் விருதுநகர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஜூனியர் பெண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் கோவை அணியை சென்னை அணி எதிர்கொண்டது. கோவை அணி சார்பில் ஆதித் அனந்தா - மதுரை அணி சார்பில் சுருதி ஆடினர். முதல் சுற்று ஆட்டத்தில் 21-10; இரண்டாவது சுற்றில் 21-16 புள்ளிகள் பெற்று கோவை அணி முன்னிலை வகித்தது. இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், கோவை ஆதித் அனந்தா, விகாசினி ஜோடி - சென்னையின் நிக்கிதா, சுருதி ஜோடியை எதிர்கொண்டு ஆடியது; முதல் சுற்று ஆட்டத்தில், 21-4; இரண்டாவது சுற்றில் 21-9 புள்ளிகள் பெற்று கோவை அணி 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.






      Dinamalar
      Follow us