/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதிக்கு தனி நிதிக்கொள்கை ஏற்படுத்த பிரதமருக்கு ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம்
/
ஏற்றுமதிக்கு தனி நிதிக்கொள்கை ஏற்படுத்த பிரதமருக்கு ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம்
ஏற்றுமதிக்கு தனி நிதிக்கொள்கை ஏற்படுத்த பிரதமருக்கு ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம்
ஏற்றுமதிக்கு தனி நிதிக்கொள்கை ஏற்படுத்த பிரதமருக்கு ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம்
ADDED : ஜூலை 26, 2011 11:11 PM
திருப்பூர் : 'வங்கி வட்டி விகிதம் உயர்வதால், ஏற்றுமதியாளர்கள் தொழில் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்க, விவசாயத்தை போல் ஏற்றுமதிக்கும், தனி நிதிக்கொள்கை உருவாக்கி, ஏழு சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும்' என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு முறை நிதிகொள்கை வெளியிடப்படும்போதும், 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்', 'ரெப்போ ரேட்' அதிகரித்து வருவதால், வங்கி வட்டி விகிதம் பற்றிய பிரச்னை எழுகிறது. சாயக்கழிவு நீர் பிரச்னையால், 734 சாய ஆலைகளை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. தற்போது, ஒன்பது சாய ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த 2010-11ம் ஆண்டு, 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியை திருப்பூர் மேற்கொண்டது. 2011-12ம் ஆண்டில், 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி சரிந்தது. தற்போது, திருப்பூர் ஜவுளித் தொழிலில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான வங்கிகளில், 'பேஸ் ரேட்' 7.75 மற்றும் 8.25 சதவீதம், 'பேசிஸ் பாயின்ட்' 75-180 அதிகரித்துள்ளது. 'லென்டிங் ரேட்' 10.5 சதவீத்தில் இருந்து 11.5 சதவீதமாக இருக்கிறது. ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 50 பேசிஸ் அதிகரித்துள்ளது. இதனால், வங்கிகளின் 'கிரெடிட் ரேட்' உயர்ந்து, திருப்பூர் பனியன் தொழிலை மீண்டும் பாதிப்புக்கு உள்ளாக்கும். உலகச்சந்தையில் கடுமையான போட்டி நிலவும் சூழலில், ஏற்றுமதியை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனா உள்ளிட்ட பிற நாடுகளில் வட்டி வகிதம் ஆறு சதவீதத்துக்கு குறைவாகவே செயல்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு பண மதிப்புகளுக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்ற, இறக்கம் உருவாவதால், ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதியாளர்களுக்கு பிரத்யேகமாக தனி வங்கி நிதிக்கொள்கையை வரையறுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயத்துறையை போல், ஏழு சதவீத வட்டி விகிதத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் நிதி உதவியை பெற முடியும். குறிப்பிட்ட நிட்வேர் ரகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரண்டு சதவீத மானியம் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுற்றது. இதை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.