/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே நாளில் பூக்கள் விலை "கிடுகிடு'
/
ஒரே நாளில் பூக்கள் விலை "கிடுகிடு'
ADDED : ஆக 11, 2011 11:07 PM
திருப்பூர் : விசேஷ தினத்தையொட்டி, நேற்று ஒரே நாளில் அனைத்து பூக்களின் விலையும் இருமடங்கு அதிகரித்தது.ஆடி மாதம் துவங்கியது முதலே விலை அதிகரித்து வந்தாலும், மார்க்கெட்டுக்கு பூ வரத்து குறைந்துள்ளதால் மற்ற தினங்களைவிட, நேற்று விலை உச்சத்தை தொட்டது.
மல்லிகை ஒரு கிலோ 300 ரூபாய்; முல்லை 240; கனகாம்பரம் 240; அரளி 100; செவ்வந்தி 130; சம்பங்கி 140; பட்டுப்பூ 40 ரூபாய், மாலை (பெரியது) 200, சிறியது 60 ரூபாய் என பூக்கள் விற்கப்பட்டன.பூ வியாபாரிகள் கூறியதாவது:திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு நிலக்கோட்டை, சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மல்லிகை, முல்லை பூக்கள் பெங்களூரு, மைசூரு பகுதிகளுக்கு தற்போது அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது; உள்ளூரில் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வரலட்சுமி விரதம், ஆடித்தபசு போன்ற விசேஷ தினங்களில் அனைவரும் கோவில், வீடுகளில் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்துவர். பூக்களின் தேவை அதிகரித்துள்ளது; ஆனால், வரத்து மிகவும் குறைந்துள்ளதால் விலை உச்சத்தை தொட்டுள்ளது. வரத்து சீராகும்போது, விலை சரிவடையும், என்றனர்.