/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊர்க்காவல் படையில் வாத்தியக்குழு
/
ஊர்க்காவல் படையில் வாத்தியக்குழு
ADDED : ஆக 14, 2011 10:31 PM
திருப்பூர் : தமிழகத்தில் முதன் முறையாக ஊர்க்காவல் படையில், பேண்டு வாத்தியக்குழு திருப்பூரில் நேற்று துவக்கப்பட்டது.காவல் துறையில் மட்டுமே பேண்டு வாத்திய இசைக்குழு உள்ளது.
முதன் முறையாக ஊர்க்காவல் படையில் பேண்டு வாத்திய இசைக்குழு திருப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விழா, ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்று நடந்தது; ஊர்க்காவல் படை முதன்மை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்; எஸ்.பி., பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஏரியா கமாண் டர் சதீஷ்குமார் வரவேற்றார். எஸ்.பி., பாலகிருஷ்ணன் பேசியதாவது: சீருடை பணியில், பேண்டு வாத்திய இசைக்குழு பணி மிக முக்கியமானது; அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவர்களது பங்களிப்பு முக்கியத் துவம் பெற்றது. நிறைய மாவட்டங்களில், பேண்டு வாத்தியக்குழு வாசிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. திருப்பூரில் துவக்கப்பட்டுள்ள பேண்டு வாத்திய இசைக்குழு, மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக திகழும். திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்களின் எண்ணிக்கை தற்போது 275 ஆக உள்ளது; விரைவில் 385 ஆக உயரும். திருப்பூருக்கு 110 பேர் கொண்ட புது கம்பெனி வர உள்ளது. தற்போது தமிழகத்தில் 11,620 பேர் உள்ளனர்; 16 ஆயிரமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆந்திராவில், போலீஸ் ஸ்டேஷனில் செய்யப்படும் சில பணிகளுக்கு ஊர்க்காவல் படை வீரர்களை பயன்படுத்துகின்றனர். சட்டம் ஒழுங்கு பணியிலும் அவர்களை ஈடுபடுத்தும் திட்டம் அங்குள்ளது. தற்போது ஊர்க் காவல் படை வீரர்களின் சம்பளம் 150 ரூபாயாக உயர்த்தப்பட்டதுபோல், மற்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேறும் வாய்ப்புள்ளது. தன்னலமற்ற சேவையும், உழைப்பும் கொண்ட ஊர்க்காவல் படை வீரர்கள், சமுதாயத்தில் இன்னும் பல உயர்வுகளை அடைவர், என்றார். ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் பங்கேற்றனர். படை தளபதி ராமன் அரசன் நன்றி கூறினார்.