sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போத்தீஸ் நடத்திய மகளிர் கொண்டாட்டம்

/

போத்தீஸ் நடத்திய மகளிர் கொண்டாட்டம்

போத்தீஸ் நடத்திய மகளிர் கொண்டாட்டம்

போத்தீஸ் நடத்திய மகளிர் கொண்டாட்டம்


ADDED : செப் 04, 2011 11:07 PM

Google News

ADDED : செப் 04, 2011 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : போத்தீஸ் நிறுவனம் சார்பில் பெண்கள் திருவிழா மகளிர் கொண்டாட்டம், திருப்பூர் ஸ்ரீவேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடந்தது; ஏராளமான பெண்கள் பங்கேற்று, பரிசுளை அள்ளிச்சென்றனர்.

திருமணத்துக்கு பின், பெண்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்த எவ்வித சந்தர்ப்பமும் அமைவதில்லை. அக்குறையை போக்கும் வகையில், போத்தீஸ் நிறுவனம் பெண்கள் திரு விழாவை பல்வேறு ஊர்களில் நடத்தி வருகிறது. திருப்பூரில் இரண்டு நாட்கள் நடந்த மகளிர் திருவிழாவில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாறுவேட போட்டியில், பிந்துஜா முதலிடம், அனிதா இரண்டாமிடம், கிருஷ்ணவேணி மூன்றாமிடம் பெற்றனர். நித்யாகாவேரி, ஹரிதர்சினி, காயத்திரி, ஆசியாபேகம் ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மவுனமொழி போட்டியில், கல்பனா, ஹேமலதா முதலிடம், ராதா, சித்ரா இரண்டாமிடம், சர்மிளா, தாட்சாயினி மூன்றாமிடம் பெற்றனர். திவ்யா, கவிதா, ரோஜா, காயத்திரி, ராஜேஸ்வரி, சுமதிபிரியா, அனுராதா, வாசுகி ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். வாதம் - விவாதம் போட்டியில், வித்யா முதலிடம், உமா மகேஸ்வரி, கல்பனா இரண்டாமிடம், நவீனா ஜாஸ்மின் மூன்றாமிடம் பெற்றனர். ரங்கோலி போட்டியில், சாய்சரண்யா முதலிடம், புவனேஸ்வரி இரண்டாமிடம், யுவராணி மூன்றாமிடம் வென்றனர். திவ்யபிரியா, சந்திரா, கவுசல்யா, பிரித்தி, சுபாஷினி, பானு, சாந்தி, மனோன்மணி, சித்ராதேவி, தங்கம், உமா மகேஸ்வரி, திவ்யா, செல்வி லட்சுமி, தமிழ்செல்வி, நிர்மலா, திவ்யா ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். ஓவியப்போட்டியில், வைஜெயந்தி நிர்மலா முதலிடம், அபிராமி இரண்டாமிடம், உமாமகேஸ்வரி மூன்றாமிடம் மற்றும் கவிதா, யசோதா ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். கவிதை போட்டியில், தீபா முதலிடம், சுகன்யா இரண்டாமிடம், கவுரி மூன்றாமிடம் பெற்றனர். நிர்மலா தேவி, மணிமேகலை, மனோன்மணி, வித்யா, ஸ்ரீவித்யா ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மெகந்தி போட்டியில், தாட்சாயினி, கிருத்திகா முதலிடம், கோகிலா, ஸ்ரீதேவி இரண்டாமிடம், ராஜேஸ்வரி, சோபனா மூன்றாமிடம் பெற்றனர். அனிதா, பிரியதர்ஷினி, சாந்தி, வினு, பகவதி, ராஜேஸ்வரி, ரேணுகா, நந்தினி, யமுனா, சரண்யா, சுமதி, சரிதா ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். காய்கறி அலங்காரத்தில், சிந்துபிரியா முதலிடம், தீபா இரண்டாமிடம், ராஜேஸ்வரி மூன்றாமி டம் பெற்றனர். சந்திரா, ஜவஹர்நிஷா சிறப்பு பரிசு பெற்றனர். கூந்தல் அலங்காரத்தில், சுமதி, லோகவர்ஷினி முதலிடம், கல்பனா, வைத்தீஸ்வரி இரண்டாமிடம், ஆர்த்தி, சுபங்கி மூன்றாமி டம் பெற்றனர். சத்யா, கார்த்திகா, எழில், யாசினி ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பாட்டுக்கு பாட்டு போட்டியில், மகேஸ்வரி, சண்முகபிரியா முதலிடம்; சசிகலா, சுமதி இரண்டாமிடம்; காயத்திரி, வித்யா மூன்றாமிடம் பெற்றனர். மேலும், ஜெயலட்சுமி, ஸ்ரீஜா, சென்பகவள்ளி, தமிழ்செல்வி, கவிதா, பிரியதர்சினி, யசோதா, பிந்தியா ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. குழு நடனத்தில், சுசித்ரா குழுவினர் முதலிடம், நிலா தமிழரசி குழுவினர் மற்றும் பானுப்பிரியா குழுவினர் இரண்டாமிடம், விஸ்மையா குழுவினர் மூன்றாமிடம் மற்றும் சண்முகபிரியா குழுவினர் சிறப்பு பரிசு பெற்றனர். கழிவு பொருட்கள் கலை போட்டியில், அஞ்சனா முதலிடம், உமாமகேஸ்வரி இரண்டாமிடம், ஜவகர் நிஷாபேகம் மூன்றாமிடம் மற்றும் முத்து, திவ்யபாரதி, அன்னபூரணி ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். சமையல் இனிப்பு பிரிவில், கலையரசி முதலிடம், ஸ்ரீதேவி இரண்டாமிடம், ராதா மூன்றாமிடம் பெற்றனர். ஜவஹர்நிஷா பேகம், வனிதா, கற்பக சுந்தரி, முத்துராஜேஸ்வரி, கவுரிபரமேஸ்வரி, கல்யாணி, மலர்விழி, மைதிலி, மும்தாஜ், ராணி, லதா ஆகியோர் சிறப்பு பரிசு வென்றனர். சமையல் சைவப்பரிவில், செல்வி லட்சுமி முதலிடம், சோபனா மற்றும் நிர்மலா இரண்டாமிடம், ஐஸ்வர்யா லட்சுமி மூன்றாமிடம் பெற்றனர். அகிலாண்டேஸ்வரி, மரகதம், நர்மதா, ஜோதிமணி, தங்கம், அம்சாவதி, அழகுதேவி, சுமதிபிரியா, சங்கீதா ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். அசைவம் பிரிவில், கோகுலவாணி முதலிடம், விஜித்ரா இரண்டாமி டம், கல்பனா மூன்றாமிடம் பெற்றனர். மைதிலி, அனிதா, வசந்தி, பாலா, தரணி ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். போத்தீஸ் மகாராணி சேலை பிரிவில், அஞ்சனா, காயத்திரி மற்றும் சுடிதார் பிரிவில், சுமித்ரா, பிரீதா ஆகியோர் வெற்றி பெற்றனர். செப்., 3, 4ம் தேதியில் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடிய, 27 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தனிநபர் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு 1,500, 1,000, 750 ரூபாய்க்கான போத்தீஸ் 'பர்சேஸ் கூப் பன்' மற்றும் சான்றிதழ் பரிசளிக்கப்பட்டது. குழுப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு தலா 1,250, 1,000, 750 ரூபாய் விதம் கூப்பன் வழங்கப்பட்டது. சிறப்பு பரிசு பெற்றவர்களுக்கு 500 ரூபாய்க்கான கூப்பன் வழங்கப்பட்டது. போத்தீஸ் சாமுத்ரிகா, பம்பரா, வஸ்தரகலா, டிசைனர் சேலைகளின் பேஷன் ÷ஷா நடந்தது. இதில், தென்னிந்தியாவின் முன்னணி மாடல்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு போத்தீஸ் ஜவுளி நிறுவன பொது மேலாளர் சத்தியநாராயணன் பரிசு வழங்கி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us