/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இந்து மக்கள் கட்சி வேட்பாளர் பட்டியல்
/
இந்து மக்கள் கட்சி வேட்பாளர் பட்டியல்
ADDED : செப் 23, 2011 09:59 PM
உடுமலை : இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி மாநில
செய்தி தொடர்பாளர் ரமணன் அறிக்கை: உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில்
உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்களை
நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குடிமங்கலம் மாவட்ட ஊராட்சி வார்டுக்கு
சீதாலட்சுமி, ஒன்றிய குழு 1 வது வார்டு (பூளவாடி, பெரியபட்டி ஊராட்சி)க்கு
அன்பிற்பிரியா, 13 வது வார்டு(புதுப்பாளையம், பண்ணைக்கிணறு)க்கு ராமன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர். உடுமலை ஒன்றியம் 20 வது வார்டு ஒன்றிய குழு
உறுப்பினருக்கு லோகமுருகன், குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி
தலைவர் பதவிக்கு ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கொண்டம்பட்டி,
ஆமந்தகடவு ஊராட்சிகளில் அனைத்து வார்டு உறுப்பினர் பதவிக்கும் வேட்பாளர்கள்
நிறுத்தப்பட உள்ளனர்', இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.