/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க.,வில் 8 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
/
அ.தி.மு.க.,வில் 8 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
ADDED : செப் 25, 2011 10:27 PM
திருப்பூர் : மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 8 பேர், மீண்டும் கவுன்சிலராக போட்டியிடுகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 52 வார்டுகளில் தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க., -17; தி.மு.க., - 13; காங்கிரஸ் - 4; ம.தி.மு.க., - 4; இந்திய கம்யூ., - 7; மா. கம்யூ., 7 என 52 கவுன்சிலர்கள் உள்ளனர்.கடந்த தேர்தலில் தி.மு.க., 8 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், முஸ்லீக் லீக் கவுன்சிலர்கள் இருவர்; 30வது வார்டு கவுன்சிலர் ரவி; 13வது வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜ், 51வது வார்டு கவுன்சிலர் சுப்புலட்சுமி, தி.மு.க., வுக்கு மாறியதால், அக்கட்சி கவுன்சிலர்களின் எண்ணிக்கை 13 ஆனது.வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும், மாநகராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்; தற்போதைய கவுன்சிலர்கள் 6 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர்; 6வது வார்டு ராதாகிருஷ்ணன், 8வது வார்டு சந்திரசேகர், 12வது வார்டு முத்துசாமி, 14வது வார்டு முருகசாமி, 17வது வார்டு கணேஷ், 45வது வார்டு செல்வம் ஆகியோர் மீண்டும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தற்போதைய 39வது வார்டு கவுன்சிலர் கவிதாவின் கணவர் குணசேகரன், 9வது வார்டு கவுன்சிலர் சுசீலாவின் கணவர் முத்து ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் முன்னாள் கவுன்சிலர்கள்; 27வது வார்டு கவுன்சிலர் கேசவன் மனைவி சுந்தராம்பாளும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.