/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் திண்டுக்கல் விவசாயிகள் களப்பயிற்சி

ADDED : ஜூன் 09, 2025 09:47 PM

உடுமலை; உடுமலை குடிமங்கலத்திலுள்ள பஞ்சலிங்க அருவி கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் களப்பயிற்சி மேற்கொண்டனர்.
உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம், பொள்ளாச்சி ரோட்டில், பஞ்சலிங்க அருவி கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயங்கி வருகிறது.
இதில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களைச் சேர்ந்த, விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்நிறுவன செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள, திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியத்திலிருந்து, வேளாண் அலுவலர் தலைமையில், 25 - விவசாயிகள் கற்றல் பயிற்சிக்காக வந்திருந்தனர்.
அவர்களுக்கு, விவசாயிகள் ஆர்வலர் குழு ஏற்படுத்தி செயல்படுதல், அரசு மானியங்கள் பெறுதல், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் நிறுவன செயல்பாடுகள் குறித்து, பஞ்சலிங்க அருவி கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம் விளக்கினார்.
நிறுவனத்தின் இயக்குனர்கள், முத்துச்சாமி, வெங்கடாசலம், முருகேசன், ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, நிறுவனத்தின் நிர்வாகி கீர்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.