/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை
ADDED : ஜூன் 26, 2025 09:56 PM
உடுமலை; உடுமலை அரசு தொழிற்பயிற்சி மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.
உடுமலை அரசு தொழிற்பயிற்சி மையத்தில், பிட்டர், மோட்டார் வாகன மெக்கானிக், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், ஆட்டோமேஷன், அட்வான்ஸ்டு சிஎன்சி மெஷின் டெக்னீசியன், ஒயர்மேன், வெல்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு 228 இடங்கள் உள்ளன.
நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன் 1 முதல் 13 ம்தேதி வரை நடந்தது. கலந்தாய்வில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசைப்பட்டியல் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடந்தது.
இதுவரை, 163 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான பாடப்பிரிவுகள் முடிந்து விட்டன.
தற்போது மீதமுள்ள இடங்களுக்கு பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தகுதியுள்ளவர்களுக்கான நேரடி மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது.