/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அழுக்கு படர்ந்தது; ஆக்சிஜனும் 'கட்'.. கலெக்டர் ஆபீசில் மீன் 'வதை' தொட்டி

ADDED : ஜன 29, 2025 03:43 AM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்தில், கூட்ட அரங்கின் முன், ஆறு அடி நீள மீன்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தொட்டியில் பல்வேறுவகையான வண்ண மீன்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. இந்த மீன் தொட்டியை முறையாக பராமரிப்பது இல்லை.
மீன்தொட்டியின் மேற்புறம் முழுவதும் துாசு படர்ந்துள்ளது. தண்ணீருக்குள் உள்ள இரண்டு ஆக்சிஜன் கருவிகளும் பழுதடைந்துவிட்டன. சுத்தம் செய்யாததால், மீன் தொட்டியின் உட்புற கண்காடியில் பாசி படர்ந்துள்ளது. அழுக்குகள் அதிகரித்து, போதிய ஆக்சிஜனும் இல்லாததால், மீன்கள் ஒவ்வொன்றாக இறந்து வருகின்றன. இறக்கும் மீன்களை அகற்றுகின்றனரே தவிர, தொட்டியை சுத்தம் செய்வதில்லை. இதனால், மீன் வளர்ப்பு தொட்டி, மீன் வதை தொட்டியாக மாறிவிட்டது. காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள மீன்தொட்டி, அசுத்தமாக காணப்படுவதால், மக்கள் முகம் சுழிக்கின்றனர்.
மீன்தொட்டியை முழுமையாக சுத்தம் செய்து பளிச்சிடச் செய்யவேண்டும். ஆக்சிஜன் கருவிகளை சரி செய்யது, மீன்களுக்கு தொடர்ச்சியாக ஆக்சிஜன் கிடைக்கச் செய்யவேண்டும். சீரான இடைவெளியில், மீன்தொட்டியின் வெளிப்புறம், உட்புறம் சுத்தம் செய்து பராமரிக்கவேண்டும்.