/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கும்மிருட்டு சாலை; விபத்து அபாயம்
/
கும்மிருட்டு சாலை; விபத்து அபாயம்
ADDED : அக் 25, 2025 01:23 AM

திருப்பூர்: திருப்பூரின் வடக்கு மற்றும் தெற்கு எல்லையாக உள்ள அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு தேசிய நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் இல்லாமல், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
ஏற்றுமதி நகரமாக உள்ள திருப்பூர், திருச்சி ரோட்டில் பல்லடத்தையும், சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலையை அவிநாசியிலும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த ரோடும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் அமைந்துள்ளது. இந்த ரோட்டில் இரவு - பகல் எந்நேரமும் கடுமையான வாகனப் போக்குவரத்து காணப்படுகிறது.
அவிநாசியிலிருந்து அவிநாசி மற்றும் திருமுருகன் பூண்டி நகராட்சிகள் அடுத்து திருப்பூர் மாநகராட்சி பகுதியைக் கடந்து பல்லடம் ரோட்டில் சின்னக்கரை, கணபதிபாளையம் ஊராட்சி பல்லடம் நகராட்சி பகுதிகளின் வழியாகச் செல்கிறது.
இந்த ரோட்டில் பல்வேறு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்கப்படாமலும், அமைக்கப்பட்ட விளக்குகள் எரியாமலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
அவிநாசியில் பை - பாஸ் ரோடு அருகாமையில் உள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை. பல்லடம் ரோட்டில் திருமுருகன் மில் ஸ்டாப், மகாலட்சுமி நகர் பகுதிகளிலும் தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலை பகுதியில் தெரு விளக்குகள் முறையாக அமைத்து பயன்படுத்தப்பட வேண்டும்.

