/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக மறியல்
/
மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக மறியல்
ADDED : பிப் 13, 2026 05:05 AM
திருப்பூர்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கடந்த, 11ம் தேதி முதல், திருப்பூரில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. ஆந்திரா மாநிலத்தை போல், தமிழக அரசும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கவேண்டும்.
சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 6 ஆயிரம், கடுமையாக உடல் பாதித்தவர்களுக்கு, 10 ஆயிரம், படுக்கை நிலையில் இருந்தால், 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாவது நாளாக நேற்றும், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் - திருப்பூர் ரோட்டில், பெண்கள், 27 பேர் உள்பட மாற்றுத்திறனாளிகள், 60 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர். மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'தமிழக அரசு, உதவித்தொகையை உயர்த்தி வழங்கும்வரை மறியல் தொடரும்,' என்றனர்.

