/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுக்கமே சுதந்திரம் கருத்தரங்கம்
/
ஒழுக்கமே சுதந்திரம் கருத்தரங்கம்
ADDED : செப் 30, 2024 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில், ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
வெங்கடேஸ்வரா நகர் கே.கே.அம்மன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மகளிர் அணி நிர்வாகி ஹம்ஸா பேகம் துவக்கி வைத்து பேசினார். பேச்சாளர் பர்வீன் சுல்தானா, சலீம் ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற குறும்படம் ஒளிபரப்பட்டது.
கருத்தரங்கம் தொடர்பாக கட்டுரை சமர்ப்பித்த மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஸம்சியா பானு நன்றி கூறினார்.