தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தனியார் பஸ்கள் விவகாரம் பேச்சுவார்த்தையில் வாக்குவாதம்

தனியார் பஸ்கள் விவகாரம் பேச்சுவார்த்தையில் வாக்குவாதம்

தனியார் பஸ்கள் விவகாரம் பேச்சுவார்த்தையில் வாக்குவாதம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 09:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 09:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி, தெக்கலுார் வழியாக பஸ்கள் இயக்கப்படாதது தொடர்பாக நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தாசில்தார் முன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெகநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுமக்கள், தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பங்கேற்றனர். பஸ்களில் அவிநாசி, தெக்கலுாருக்கு செல்ல ஏறினால் இறக்கிவிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிரைவர், கண்டக்டர்கள், பொதுமக்கள் பஸ்களை மறித்து தாக்க வருவதாகக் கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தீர்வு ஏற்படாமல் கூட்டம் பாதியில் முடிந்தது.

அவிநாசி, தெக்கலுாருக்கு பஸ்கள் இயக்கப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

அவிநாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெகநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுமக்கள், தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us