/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோய் அபாயம்; வேலாயுதம்பாளையம் மக்கள் கொதிப்பு
/
நோய் அபாயம்; வேலாயுதம்பாளையம் மக்கள் கொதிப்பு
ADDED : அக் 12, 2025 12:20 AM

அவிநாசி தாலுகா, வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிக்கவுண்டன் புதுாரில் கிராம சபா கூட்டம், பி.டி.ஓ., (கிராமம்) விஜயலட்சுமி தலைமையில் நடந்தது.
முறையான சாக்கடை, ரோடு வசதியை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கு எதிரில் உள்ள பொதுக்கழிப்பிடத்தின் செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் வெளியேறி குட்டை போல தேங்கி நிற்பதை சரிசெய்ய வேண்டும்.
சரிசெய்யாததால், மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். அந்த இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு சாக்கடை கால்வாய் மற்றும் கழிவுநீர் தேங்காமல் வடிகால் வசதி அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்பி,உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், ''ஒரு மாத காலத்திற்குள் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும்'' என்றனர்.