/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையில் நோய்த்தாக்குதல்; கட்டுப்படுத்த வலியுறுத்தல்
/
தென்னையில் நோய்த்தாக்குதல்; கட்டுப்படுத்த வலியுறுத்தல்
தென்னையில் நோய்த்தாக்குதல்; கட்டுப்படுத்த வலியுறுத்தல்
தென்னையில் நோய்த்தாக்குதல்; கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : டிச 09, 2024 10:34 PM

உடுமலை; தென்னையில் பரவி வரும் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என, கோட்டமங்கலம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரம், கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம் சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.
இப்பகுதியில், சமீபத்தில் தென்னை மரங்களில் பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு பரவி வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: காய்ப்பிலுள்ள தென்னை மரங்களில் மட்டைகள் திடீரென சரிந்து விட்டது. குரும்பைகள் உதிர்ந்து ஓலைகளும் பாதிக்கிறது. இதனால், மரங்கள் காய்ப்புத்திறன் இழந்து, சில மாதங்களில் கருகி விடுகிறது. மரங்கள் கருகுவதால், பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் தெரியவில்லை. தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து, நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.