/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருதரப்பினர் பிரச்னை; விநாயகர் கோவில் அகற்றம்
/
இருதரப்பினர் பிரச்னை; விநாயகர் கோவில் அகற்றம்
ADDED : ஜூலை 31, 2025 11:25 PM

பொங்கலுார்; காங்கயம் அருகே பெருமாள் மலையில் ஒரு தரப்பினர் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் விநாயகர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து அங்கு சிலை வைக்கக் கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இடத்தை ஆய்வு செய்த வருவாய் துறையினர் அது மலை குன்று உள்ள பகுதி என்று தெரிவித்து, அனுமதி இன்றி இங்கு பணி செய்யக்கூடாது என்றனர். இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முடிவு எட்டப்படவில்லை. ஒரு தரப்பினர் ரெடிமேடு கட்டடம் கட்டி அதில் விநாயகர் சிலையை அமைத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து காங்கயம் தாசில்தார் மோகனன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை கிரேன் மூலம் பாதுகாப்பாக எடுத்து மாற்று இடத்தில் வைத்தனர்.