/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மெடிக்கலில் தகராறு; 4 வாலிபர்கள் கைது
/
மெடிக்கலில் தகராறு; 4 வாலிபர்கள் கைது
ADDED : ஜன 04, 2024 12:29 AM

பல்லடம் : பல்லடம் அருகே, கரைப்புதுார் - அண்ணா நகரை சேர்ந்த சாஹிப் மகன் சையதுல்லா 23. மெடிக்கல் நடத்தி வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன், கடைக்கு வந்த நான்கு இளைஞர்கள், சையதுல்லாவுடன் தகராறில் ஈடுபட்டனர்.
நேற்று முன் தினம் மீண்டும் கடைக்கு வந்த அதே நான்கு பேர், தகராறில் ஈடுபட்டு, சையதுல்லாவை தாக்கி காயப்படுத்தினர். இதனால், அவர், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது குறித்து அவர் அளித்த புகாரியின் பேரில், கணபதிபாளையத்தை சேர்ந்த ரகுபதி மகன் கிருஷ்ணன் 22, அருள்புரம் நாகராஜன் மகன் புகழேந்தி 22, நொச்சி பாளையம் சரவணன் மகன் கிஷோர் 24 மற்றும் சேடபாளையம் சரவணன் மகன் சித்தார்த் 21 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.