ADDED : பிப் 17, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், சிக்கண்ணா கல்லுாரி மாணவ, மாணவியருக்கு குடற்புழுநீக்க மாத்திரை நேற்று வழங்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். ஒவ்வொரு துறை மாணவ, மாணவியருக்கும் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டன.