/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் பணியை துவக்கியது மாவட்ட நிர்வாகம்: ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும் 15,84,243 வாக்காளர்!
/
தேர்தல் பணியை துவக்கியது மாவட்ட நிர்வாகம்: ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும் 15,84,243 வாக்காளர்!
தேர்தல் பணியை துவக்கியது மாவட்ட நிர்வாகம்: ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும் 15,84,243 வாக்காளர்!
தேர்தல் பணியை துவக்கியது மாவட்ட நிர்வாகம்: ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும் 15,84,243 வாக்காளர்!
ADDED : மார் 17, 2024 12:01 AM

திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதியில், ஏழு லட்சத்து, 81 ஆயிரத்து, 196 ஆண்கள்; எட்டு லட்சத்து, 2 ஆயிரத்து, 810 பெண்கள், 237 திருநங்கைகள் என, 15 லட்சத்து, 84 ஆயிரத்து, 243 வாக்காளர் உள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதி, நான்காவது முறையாக பொது தேர்தலை சந்திக்கிறது. தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை, தேர்தல் அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய லோக்சபா தொகுதியில், 694 மையங்களில், 1,732 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன.
'சர்வீஸ்' வாக்காளர்
ராணுவம் உட்பட, முப்படைகளில் பணியாற்றும் வாக்காளர் மற்றும் அவர்கள் குடும்ப வாக்காளர் விவரம், 'சர்வீஸ்' வாக்காளர் என்ற தனி பட்டியலில் பராமரிக்கப்படுகிறது. அதன்படி, திருப்பூர் தொகுதியில், 191 ஆண்கள்; ஒன்பது பெண்கள் என, 200 சர்வீஸ் வாக்காளர் உள்ளனர்.
அதிகபட்சமாக, அந்தியூர் தொகுதியில், 61 ஆண்கள்; இரண்டு பெண்கள் என, 63 வாக்காளர் உள்ளனர். பவானியில், 57 பேர்; திருப்பூர் வடக்கில், 24 ஆண்கள்; ஒரு பெண் என, 25 வாக்காளர்; கோபியில், 22 ஆண்கள், 2 பெண்கள் என, 24 வாக்காளர்; பெருந்துறையில், 15 ஆண்கள்; நான்கு பெண்கள் என, 19 வாக்காளர்; திருப்பூர் தெற்கு தொகுதியில், 12 வாக்காளர் உள்ளனர். சர்வீஸ் வாக்காளர் எண்ணிக்கையுடன் சேர்த்து, தொகுதியில், 15 லட்சத்து, 84 ஆயிரத்து, 443 வாக்காளர் உள்ளனர்.
துணை ஓட்டுச்சாவடி
தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, 1,500க்கும் அதிகமான வாக்காளர் உள்ள, ஓட்டுச்சாவடிகளை பிரித்து, துணை ஓட்டுச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1,500க்கும் அதிகமான வாக்காளர் இருந்த சாவடிகளில் இருந்து, 21 துணை ஓட்டுச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு -7, திருப்பூர் தெற்கு -6, பல்லடம் -5, உடுமலை -2, அவிநாசி -1 என, 21 சாவடிகள் உருவாக்கப்படுகிறது. இத்துடன், 75 சாவடிகள் கட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளன; 23 சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன; 332 சாவடிகள், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் -417 ஓட்டுச்சாவடி; திருப்பூர் வடக்கு - 386, அவிநாசி - 314, தாராபுரம் - 298, உடுமலை - 296, காங்கயம் - 295, மடத்துக்குளம் - 287, திருப்பூர் தெற்கு - 248 என, 2,541 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
கட்டுப்பாட்டு அறை
தேர்தல் பணிகளின் மிக முக்கியமானது, விதிமுறை மீறல்களை தடுப்பது. அதற்காகவே, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், சட்டசபை தொகுதி வாரியாக இயங்க உள்ளன. அவற்றை, ஜி.பி.எஸ்., மூலமாக கண்காணிக்கவும், பொதுமக்கள் புகார்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்ளவும், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து தெரியவந்தால், 1800 - 425 - 6989 என்ற 'டோல் ப்ரீ' எண்களில் தொடர்புகொள்ளலாம் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
----------------------
லோக்சபா தேர்தலுக்காக கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை. வேட்புமனு தாக்கலுக்கு தேவையான படிவங்கள் தருவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து தெரியவந்தால், 1800 - 425 - 6989 என்ற 'டோல் ப்ரீ' எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்

