ADDED : செப் 04, 2026 07:20 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான, 8வது ஜூனியர் மற்றும் சீனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள், நேற்று துவங்கியது.திருப்பூர் மாநகர காவல்துறை கமிஷனர் ராஜேஸ்வரி, பெஸ்ட் கார்ப்பரேஷன் இயக்குனர் ஆதித்யா ராஜ்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத் தலைவர் இளங்கோவன், திருப்பூர் மாவட்ட தடகள சங்க தலைவர் இளங்கோவன், திருப்பூர் மாவட்ட தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகு குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, மாணவர்களும், சிறப்பு விருந்தினர்களும், விளையாட்டு உறுதிமொழி, போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
–––
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில், ஜூனியர் மற்றும் சீனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நேற்று துவங்கின. ஓட்டப்பந்தயத்தில் விரையும் சிறுவர், சிறுமியர்; நீளம் தாண்டும் மாணவியர்.
