/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட தடகளப் போட்டி கிட்ஸ் கிளப் பள்ளி அபாரம்
/
மாவட்ட தடகளப் போட்டி கிட்ஸ் கிளப் பள்ளி அபாரம்
ADDED : மார் 20, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டியில், கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியின், 50 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டுகளில், 46 தங்கம், 40 வெள்ளி, 35 வெண்கலம் வென்றனர். 288 புள்ளிகளுடன் ஓட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.
மாவட்ட தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கிட்ஸ்கிளப் பள்ளி குழுமங்களின் தலைவர் மோகன்கார்த்திக் பதக்கம், சான்றிதழ் வழங்கி, பாராட்டினார். பள்ளி முதல்வர் நிவேதிகா, பள்ளி இயக்குனர்கள் ஐஸ்வர்யா நிகில்சுரேஷ், பள்ளி துணை முதல்வர் சுமையா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டினர்.