/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட இறகு பந்து போட்டி: ஏட்டு - கோர்ட் ஊழியர் சாதனை
/
மாவட்ட இறகு பந்து போட்டி: ஏட்டு - கோர்ட் ஊழியர் சாதனை
மாவட்ட இறகு பந்து போட்டி: ஏட்டு - கோர்ட் ஊழியர் சாதனை
மாவட்ட இறகு பந்து போட்டி: ஏட்டு - கோர்ட் ஊழியர் சாதனை
ADDED : செப் 01, 2025 07:27 PM
-நமது நிருபர் -
முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் ஏட்டு, கோர்ட் ஊழியர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
முதல்வர் கோப்பை போட்டியில், பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என, ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடக்கின்றன. அரசு ஊழியர்களுக்கான இறகு பந்து இரட்டையர் பிரிவில், மாவட்ட அளவில், 64 அணிகள் பங்கேற்று விளையாடின.
திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட கோர்ட் ஊழியர் நவீன்குமார் ஆகியோர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தனர். சென்னையில் நடைபெற உள்ள மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதற்கு முன், 2023ல் நடந்த ஒற்றையர் பிரிவில் கிருஷ்ணமூர்த்தி வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம், 2024ல் இரட்டையர் பிரிவில், இரண்டாமிடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற போலீஸ் ஏட்டை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
* முதல்வர் கோப்பை விளையாட்டு அரசு ஊழியர்களுக்கான வாலிபால் போட்டி திருப்பூரில் நடந்தது. மாநகர போலீஸ், மாவட்ட போலீஸ் என, மாவட்டம் முழுதும், 11 அணிகள் பங்கேற்றன. இதில், சிறப்பாக விளையாடிய மாவட்ட போலீஸ் அணி இறுதி போட்டியில் வென்றது. இதன் மூலம் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளது.
கடந்த, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து, முதலிடத்தை மாவட்ட போலீஸ் அணி தக்க வைத்து வருகிறது. வென்ற மாவட்ட அணியை எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் மற்றும் போலீசார் பாராட்டினர்.