/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கூடைப்பந்து அணி வீரர்கள் தேர்வு
/
மாவட்ட கூடைப்பந்து அணி வீரர்கள் தேர்வு
ADDED : மே 26, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அணித்தேர்வு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில், 2007 ம் ஆண்டு, ஜன., 1 அன்று, அதன் பின் பிறந்த, 18 வயது உட்பட்ட, ஆண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 86 வீரர்கள் பங்கேற்றனர்; திறமை காட்டிய, 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2007ம் ஆண்டு, ஜன., 1 அன்று, அதன் பின் பிறந்த, 18 வயது உட்பட்ட, பெண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 31 வீராங்கனைகள் பங்கேற்றனர்; திறமை காட்டிய, 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.