/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட செஸ்; 200 மாணவர்கள் பங்கேற்பு
/
மாவட்ட செஸ்; 200 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : அக் 13, 2025 12:32 AM

திருப்பூர்:திருப்பூர் கிங்ஸ் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட செஸ் போட்டி திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள தேவாங்கர் சமூக திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இரு பாலருக்கும் 8, 11, 14, 17 வயது மற்றும் பொது பிரிவுகள் என போட்டிகள் நடந்தன.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் என, 200 பேர் பங்கேற்றனர். சிறுவர் பிரிவில் 20 பரிசுகள், சிறுமியரில் 15, 17 வயது பிரிவில், 10 பரிசு மற்றும் பொதுப்பிரிவில், 10 பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர் களுக்கு முறையே பதக்கம், காசோலை, வழங்கப்பட்டன. பங்கேற்ற அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றோர் 8 வயது சிறுவர் பிரிவில், லக்ஷ்மி தேவி முதலிடம், மிதுன் இரண்டாமிடம், சாய்வருண் மூன்றாமிடம்; சிறுமியரில் திகழ்மதி முதலிடம், யாழினி இரண்டாமிடம், நிலானி மூன்றாமிடம்.
11 வயது சிறுவர் பிரிவில் சர்வேஷ் முதலிடம், ரியான் இரண்டாமிடம், அபஸ்டால் ஜோ மூன்றாமிடம்; சிறுமியரில் நந்ததாரணி முதலிடம், வுக்தா இரண்டாமிடம், அஸ்வதா மூன்றாமிடம்.
14 வயது சிறுவர் பிரிவில் ரோஹித் முதலிடம், அஷ்வின் இரண்டாமிடம், யாகவ் மூன்றாமிடம்; சிறுமியரில் ரேஷ்மா முதலிடம், தர்ஷா ஸ்ரீ இரண்டாமிடம், சஷ்டிகா மூன்றாமிடம்.
பொதுப்பிரிவில் அபினேஷ் முதலிடம், தேவதருண் இரண்டாமிடம், செந்தில்குமார் மூன்றாமிடம் பெற்றனர்.