/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட சதுரங்க போட்டி; மாணவர்கள் அசத்தல்
/
மாவட்ட சதுரங்க போட்டி; மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 19, 2024 06:32 AM

திருப்பூர்; திருப்பூர் அருகே அம்மாபாளையத்தில் உள்ள 'ஸ்மார்ட் மாடர்ன்' சி.பி.எஸ்.இ., பள்ளியில், திருப்பூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். 5வது 'ஸ்மார்ட் மாடர்ன்' கோப்பைக்கான இப்போட்டியை, 'பாரதி செஸ் அகாடமி' ஏற்பாடு செய்திருந்தது.இதில், 8, 11, 14 மற்றும், 18 வயது வாரியாக, மாணவ, மாணவியருக்கென தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் பரிசு, சைக்கிள் மற்றும், 25 பேருக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஒட்டு மொத்தமாக, அனைத்து பிரிவினருக்கும் சேர்த்து, 8 சைக்கிள் மற்றும், 100 கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வர் ராஜேந்திரபிரசாத், பரிசு வழங்கினார்.

