ADDED : ஆக 19, 2026 08:23 PM
திருப்பூர், ஆக. 20–
திருப்பூரில் நடந்த மாவட்ட சதுரங்க போட்டியில், 14 வட்டாரங்களைச் சேர்ந்த 332 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கோவில்வழி–பெருந்தொழுவு ரோடு, பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த போட்டியில், 11, 14, 17, 19 வயது பிரிவுகளில் 168 மாணவர்கள், 164 மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்தனர். பள்ளி இயக்குனர் சக்திநந்தன், இணைச்செயலாளர் வைஷ்ணவி போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாலசுப்ரமணியம் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். தண்டபாணி, ஜெரால்டு, லோகநாதன், தேவ்ஆனந்த் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
–––
பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட சதுரங்கப் போட்டி நடந்தது.
