ADDED : அக் 07, 2024 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட செஸ் அசோசியேஷன், லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் யங் ஏங்கர் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, தில்லை நகர், மணி பப்ளிக் அகாடமி பள்ளியில் நேற்று நடந்தது.
ஒன்பது, 12 மற்றும் 15 வயது பிரிவில் மாவட்டம் முழுதும் இருந்து, 139 பேர் பங்கேற்றனர். லயன்ஸ் கிளப் தலைவர் ஆதித்யகிரண் வரவேற்றார். லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் விஸ்வேஸ்வரன், செயலர் ரவீந்திரன் சிங் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு லயன்ஸ் கிளப் நிர்வாகி ஆனந்தகுமாரி சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட சதுரங்க சங்க நிர்வாகிகள் ஹரிஹரன், கோகுல் ஒருங்கிணைத்தனர்.