/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காது கேளாதோருக்கான மாவட்ட சதுரங்க போட்டி
/
காது கேளாதோருக்கான மாவட்ட சதுரங்க போட்டி
ADDED : மார் 24, 2025 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் சார்பில், மாவட்ட சதுரங்க போட்டி, அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
சங்க தலைவர் கார்த்திகேயன், பொதுச்செயலாளர் ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டி விதிமுறைகள் குறித்து, சைகை மொழியில் போட்டியாளர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.
திருப்பூர் மாவட்ட சதுரங்க சங்க நடுவர் கோபிகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.