/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: தயாராகிறது மாவட்ட தேர்தல் பிரிவு
/
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: தயாராகிறது மாவட்ட தேர்தல் பிரிவு
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: தயாராகிறது மாவட்ட தேர்தல் பிரிவு
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: தயாராகிறது மாவட்ட தேர்தல் பிரிவு
ADDED : அக் 26, 2025 10:16 PM
திருப்பூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்வதற்காக, தேர்தல் கமிஷன் அறிவிப்பை எதிர்பார்த்து, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. எட்டு தொகுதிகளில் மொத்தம் 24 லட்சத்து 27 ஆயிரத்து 50 வாக்காளர்கள், பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ள, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.
தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளரையும் சரிபார்க்கும்வகையில், தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டுவருகிறது.
பீஹார் மாநிலத்தை போலவே தமிழகத்திலும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகளை, தேர்தல் கமிஷன், வரும் வாரத்தில் வெளியிடும்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், அந்தந்த பி.எல்.ஓ.,க்கள் (ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்) வாயிலாக, வீடு தேடிச் சென்று, தீவிர திருத்தத்துக்கான படிவம் வழங்கப்படும். வாக்காளர்கள் அந்த படிவத்தில் கையழுத்திட்டு, தேர்தல் கமிஷன் குறிப்பிடும் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில், வாக்காளர் வரைவு பட்டியல் தயாரிக்கப்படும். விடுபட்டோருக்கு, கூடுதல் அவகாசங்களும் வழங்கப்படும்.

