/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அளவிலான நடித்தல் போட்டி: உடுமலை பள்ளி வெற்றி
/
மாவட்ட அளவிலான நடித்தல் போட்டி: உடுமலை பள்ளி வெற்றி
மாவட்ட அளவிலான நடித்தல் போட்டி: உடுமலை பள்ளி வெற்றி
மாவட்ட அளவிலான நடித்தல் போட்டி: உடுமலை பள்ளி வெற்றி
ADDED : நவ 06, 2025 11:11 PM

உடுமலை: மாவட்ட அளவிலான ' பங்கேற்று நடித்தல் ' போட்டியில், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசு பெற்றது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், தேசிய மக்கள் தொகைக் கல்வித்திட்ட வளரிளம் பருவக்கல்வி தொடர்பான மாவட்ட அளவிலான பங்கேற்று நடித்தல் போட்டி, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ராஜன் வரவேற்றார்.
திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன் துவக்கி வைத்து, வளரிளம் பருவக் கல்வியின் அவசியம் மற்றும் நடைமுறையில் உள்ள திட்டச் செயல்பாடுகள் குறித்து, பேசினார்.
நிறுவனத்துணை முதல்வர் விமலாதேவி, முதுநிலை விரிவுரையாளர்கள் ராஜன், சரவணகுமார், சுகுணா பேசினர்.
ஆரோக்கியமான வளர்ச்சி, ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம், போதைப் பொருள் பயன்பாட்டை தடுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், 12 பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் பங்கேற்று நடித்தனர்.
நடுவர்களாக திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் விமலாதேவி, சரவணகுமார்,திருமூர்த்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரம் செயல்பட்டனர்.
இப்போட்டியில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், திருப்பூர் பழனியம்மாள் நகரவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் பரிசும், குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. முதலிடம் பெற்ற மாணவர்கள் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்கள் செய்திருந்தனர். போட்டியில், 14 ஒன்றியங்களைச் சார்ந்த, 60 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

