ADDED : பிப் 13, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலையில் மாவட்ட அளவிலான சிலம்பப்போட்டி பிப்., 17ம் தேதி நடக்கிறது.
உடுமலை சைலாத் சிலம்ப சங்கம் சார்பில், திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி பிப்., 17ம் தேதி நடக்கிறது.
போட்டிகள் உடுமலை பொள்ளாச்சி ரோட்டிலுள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடக்கிறது. போட்டிகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், சப்--ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளாக நடக்கிறது.
இதில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகள் இடம்பெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

