/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
22ல் மாவட்ட அளவிலான வனத்துறை குறைதீர் கூட்டம்
/
22ல் மாவட்ட அளவிலான வனத்துறை குறைதீர் கூட்டம்
ADDED : டிச 20, 2025 08:58 AM
உடுமலை: வனத்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 22ம் தேதி நடக்கிறது.
வனத்துறை சார்பில், மாதம் தோறும் வனச்சரக அளவிலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட அளவில், மாவட்ட வன அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது.
அதன் அடிப்படையில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 22ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உடுமலையிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள வனச்சரக அலுவலர்கள் பங்கேற்குமாறும், மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்கள் புகார்களை தெரிவித்து பயன்பெறுமாறும், மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் ராஜேஸ் தெரிவித்துள்ளார்.

