ADDED : ஜூலை 10, 2025 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில் மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் நடந்தது.
நடப்பு ஆண்டுக்கான, நல்லுலகை கட்டமைக்கும் கூட்டுறவு என்ற கருப்பொருள் அடிப்படையில், சர்வதேச கூட்டுறவு ஆண்டாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதையொட்டி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சு, கதைசொல்லுதல் மற்றும் கட்டுரைப்போட்டி நடந்தது.
இப்போட்டிகளில், 'நான் பார்த்த கூட்டுறவு சங்கத்தின் கதை' என்ற தலைப்பில் போட்டிகள் நடந்தது. பள்ளி அளவில், முதல் மூன்று இடங்களில் இடம் பெற்ற மாணவர்களுக்கு, வட்டார அளவிலான போட்டி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் சிவமணி போட்டிகளை ஒருங்கிணைத்தார்.