/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அளவிலான தொழில் பழகுனர் சேர்க்கை
/
மாவட்ட அளவிலான தொழில் பழகுனர் சேர்க்கை
ADDED : ஜன 16, 2025 11:33 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவில், தொழில் பழகுனர்களுக்கான (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில், வரும், 20ம் தேதி காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.இதில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்களின் நிறுவனங்களில் உள்ள தொழில் பழகுனர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை
இதில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெற்றவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும்.தொழில் பழகுனர்களுக்கான உதவித் தொகை, தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும்.
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., திட்டத்தின் கீழ், தொழிற் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ள, 8, 10, 11 மற்றும், 12ம் வகுப்பு முடித்தவர்கள் உரிய அசல் சான்றிதழ் மற்றும் ஆவணங்களுடன் இம்முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ, 94990 55695, 86100 96431 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.
இத்தகவலை, திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி மாவட்ட உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.