/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட மாணவர் கபடி; அரசு பள்ளி அபாரம்
/
மாவட்ட மாணவர் கபடி; அரசு பள்ளி அபாரம்
ADDED : நவ 11, 2025 12:31 AM

திருப்பூர்: அலகுமலையில் நடந்த மாவட்ட மாணவர் கபடி போட்டியில், கே.எஸ்.சி., கணபதிபாளையம், அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி மாணவர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெற்று, பாராட்டு பெற்றனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில கபடி போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான, மாவட்ட மாணவர் கபடி போட்டி, அலகுமலை வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி செயலாளர் அண்ணாதுரை போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாவட்ட கண்காணிப்பு குழு ராஜேந்திரன், முருகன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்த், மணிவண்ணன், ரமேஷ், தமிழ்வாணி, சிவஇளங்கோ, பிரபு, மருதையன் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர்.மாவட்டத்தின் ஏழு குறுமைய அளவில் முதலிடம் பெற்ற அணிகள் பங்கேற்றன. 14 வயது பிரிவில், கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி அணி - மூலனுார் பாரதி வித்யாலயா அணிகள் மோதின. 46 - 39 என்ற புள்ளிக்கணக்கில், கே.எஸ்.சி., பள்ளி அணி வெற்றி பெற்றது. 17 வயது பிரிவில், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, கே.எஸ்.சி., பள்ளி அணியை, 28 - 25 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
பத்தொன்பது வயது பிரிவில், வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி அய்யங்காளிபாளையம் அணி, 31 - 28 என்ற புள்ளிக்கணக்கில், பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது. முதலிடம் பெற்ற அணி மாநில கபடி போட்டிக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

