/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட நீச்சல் போட்டி; 351 மாணவர் பங்கேற்பு
/
மாவட்ட நீச்சல் போட்டி; 351 மாணவர் பங்கேற்பு
ADDED : அக் 08, 2025 11:55 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் புதிய விளையாட்டு போட்டிகள், கடந்த, 6ம் தேதி முதல் நடந்து வருகிறது. 15 வேலம்பாளையம் ட்ரிக் அகாடமியில், நேற்று, மாவட்ட நீச்சல் போட்டி நடந்தது.
மாவட்டத்தின் பல்வேறு அரசு, மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த, 185 மாணவர், 166 மாணவியர் என மொத்தம், 351 பேர் பங்கேற்றனர்.முன்னதாக போட்டிகளை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், 15 வேலம்பாளையம் ட்ரிக் அகாடமி செயலாளர் சிவக்குமார் துவக்கி வைத்தனர்.
'பட்டர்பிளை', 'ப்ரீஸ்டைல்', 'பேக் ஸ்ட்ரோக்', 'பிரன்ட் ஸ்ட்ரோக்', 'மெட்லி ரிலே' உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. 14, 17 மற்றும் 19 வயது பிரிவில் ஆர்வமுடன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இலக்கை நோக்கி நீந்தினர்.
மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டவர்களை மாநில போட்டிக்கு தேர்வு செய்தனர்.