/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கபடி போட்டிக்கு மாவட்ட அணி தேர்வு
/
மாநில கபடி போட்டிக்கு மாவட்ட அணி தேர்வு
ADDED : நவ 02, 2024 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மாநில கபடி கழகம் சார்பில், வரும், 8 முதல், 10ம் தேதி வரை, திருவண்ணாமலையில், 50வது இளையோர் பெண்கள் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.
இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட வீராங்கனையர் அணித்தேர்வு, காங்கயம் ரோடு, மாவட்ட கபடி கழக மைதானத்தில் நேற்று நடந்தது.
மாநில கபடி கழக பொருளாளர் ஜெய சித்ரா சண்முகம் துவக்கி வைத்தார். மாவட்ட கபடி கழக துணைத்தலைவர் ராமதாஸ், செய்திதொடர்பாளர் சிவபாலன், இணை செயலாளர் வாலீசன், தேர்வுக்குழு தலைவர் ருத்ரன், மாவட்ட நடுவர் குழு கன்வீனர்சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பங்கேற்ற, 90 பேரில் இருந்து, திறமை காட்டி விளையாடிய, 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.