/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட வாலிபால் வித்யவிகாசினி வெற்றி
/
மாவட்ட வாலிபால் வித்யவிகாசினி வெற்றி
ADDED : அக் 27, 2025 11:10 PM
திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், அலகுமலை வித்யாலயா பள்ளியில், மாவட்ட மாணவர் வாலிபால் போட்டி நேற்று நடந்தது.
இதில், 14, 17 மற்றும், 19 வயது மூன்று பிரிவில், ஜெய்நகர், வித்யவிகாசினி பள்ளி அணி முதலிடம் பெற்று, அசத்தியது. 14, 17 மற்றும், 19 வயது பிரிவு முறையே, பூமலுார் அரசு மேல்நிலைப்பள்ளி (பல்லடம் குறுமையம்), எஸ்.வி.ஜி., அரசு மேல்நிலைப்பள்ளி, உடுமலை (உடுமலை குறுமையம்), திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (திருப்பூர் வடக்கு குறுமையம்) இரண்டாமிடம் பெற்றது. முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றன.
ஜூடோ: 82 பேர் பங்கேற்பு :
திருப்பூர், காலேஜ் ரோடு, எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் மாவட்ட மாணவியர் ஜூடோ போட்டி நடந்தது.
விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பாலசுப்ரமணியம் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்டம் முழுதும், ஏழு குறுமையங்களில் இருந்து, 82 மாணவியர் பங்கேற்றனர். 14, 17 மற்றும், 19 வயது பிரிவுக்கு, 20 முதல் 70 கிலோ எடைப்பிரிவில் போட்டிகள் நடந்தது.

