/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி நிர்வாக செயல்பாட்டில் குளறுபடி: வார்டு உறுப்பினர்கள் கருத்து கேட்பு கூட்டம் வார்டு உறுப்பினர்கள் கருத்து கேட்பு கூட்டம்

ADDED : செப் 25, 2024 12:42 AM

உடுமலை : உடுமலை ஊராட்சி ஒன்றியம், போடிபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டில், குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ஊராட்சித்தலைவர் சவுந்தரராஜன் மீது, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,போடிபட்டி ஊராட்சியில், 2020 ஜனவரி முதல் 2022மார்ச் வரைஊராட்சி நிர்வாகத்தின் செலவினங்களை ஆய்வு நடத்தியதில், ஊராட்சி நிதியில் பணிகளை செயல்படுத்தும் போது, டெண்டர் விதிமுறைகள், பராமரிப்பு மதிப்பீடுகள், மேற்பார்வை கொள்முதல் செய்வதில் விதிமுறைகள் பின்பற்றப்படாதது, அரசுக்கு சேர வேண்டிய வரியினங்கள் பிடித்தம் செய்யாதது, ஜி.எஸ்.டி., எண் இல்லாத பட்டியல்களுக்கு தொகை வழங்கியது, அந்தந்த நிதியாண்டுகளில் கேட்பு நிர்ணயம் செய்யப்பட்ட வரியினங்களை முழுமையாக வசூல் செய்யாமல் விட்டது என, பல்வேறு குறைபாடுகள், ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, போடிபட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
உறுப்பினர்கள் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அறிக்கையாகவும், வாய்மொழியாகவும் பதிவு சமர்ப்பித்தனர்.
இறுதியாக ஊராட்சித்தலைவர், புகாருக்கான தன் விளக்கத்தையும் கருத்தாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் பதிவு செய்தார்.
கூட்டம் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. கருத்து கேட்பு கூட்டம் குறித்த வார்டு உறுப்பினர்களின் அறிக்கை மற்றும் வாக்குமூலம், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.