
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதப்பூரின் மையப் பகுதியில் சென்றது.
சில ஆண்டுகளுக்கு முன், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வளைவாக இருந்த பகுதிகள் நேராக மாற்றப்பட்டது. அப்போது மாதப்பூரின் மையப் பகுதியில் சென்ற ரோடு ஊரின் ஒதுக்குப்புறமாக சென்றது. தற்போது ஊரின் நடுவே செல்லும் ரோட்டில் உள்ளூர் வாகனங்கள் மற்றும் சில டவுன் பஸ்கள் மட்டுமே செல்கின்றன. மாதப்பூர் பிரிவில் நடு ரோட்டில் பள்ளம் விழுந்துள்ளது. அந்த ரோடு முக்கியத்துவத்தை இழந்ததால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

