/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம் இரண்டாக பிரியுங்கள்'
/
'அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம் இரண்டாக பிரியுங்கள்'
'அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம் இரண்டாக பிரியுங்கள்'
'அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம் இரண்டாக பிரியுங்கள்'
ADDED : பிப் 10, 2025 11:54 PM
பல்லடம்; கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு அறிக்கை: சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல், நீண்ட துாரம் ஆகியவற்றுக்கு இடையே, அங்கு சென்று கமிஷனரை சந்திப்பது மிகவும் சிரமமாக உள்ளது. சென்னை ஐகோர்ட் எவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மதுரையில் ஐகோர்ட் கிளை செயல் படுகிறதோ, அதேபோல், சென்னையில் செயல்படும் அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மதுரையிலும் புதிய கமிஷனர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.
தேவையற்ற அலைச்சல், வீண் விரயம் தவிர்க்கப்படும். அதிகாரிகளுக்கு மட்டுமன்றி, குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்களும் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.