/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் பிரிப்பு; அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
/
தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் பிரிப்பு; அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் பிரிப்பு; அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் பிரிப்பு; அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
ADDED : ஜூலை 23, 2025 09:00 PM

உடுமலை; உடுமலை தொகுதியில், ஓட்டுச்சாவடிகள் பிரிப்பது மற்றும் இடமாற்றம் செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
உடுமலை சட்டசபை தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார்.
ஒவ்வொரு தேர்தலிலும், 100 சதவீத ஓட்டுப்பதிவை இலக்காகக்கொண்டு, இந்திய தேர்தல் கமிஷன், புதிய நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது.
வாக்காளர்கள் வசதிக்காக, தற்போது, 1,200 வாக்காளருக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிய ஓட்டுச்சாவடி உருவாக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், உடுமலை தொகுதியில், 168 ஓட்டுப்பதிவு மையங்களில், 294 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இத்தொகுதியில், ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 771 ஆண்கள், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 116 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 36 பேர் என, 2 லட்சத்து, 68 ஆயிரத்து,918 பேர் உள்ளனர்.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 1200 க்கு மேல் வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே மையத்தில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் எண்ணிக்கை சீராக இருக்கும் வகையில், மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
இது குறித்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.